Coimbatore Students Shine

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் விழாவில் கோவை மாணவிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நாளை விருது வழங்க உள்ளார்

கோவை மாநகராட்சி நிர்வாகம் இன்று ஜன.23 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோயம்புத்தூர் KPR கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கடந்த 4.01.2025 அன்று நடைபெற்ற ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கான மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றன.

அதில் தேசபக்தி பாடல் பிரிவில், கோயம்புத்தூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஷாஜகான் நகர் ஐந்தாம் வகுப்பு மாணவி எஸ்.மனஸ்வினி கலந்து கொண்டு முதலிடம் பெற்றுள்ளார். அவர் நாளை (24.01.2025) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் விழாவில் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களால் விருது பெற உள்ளார்.

மேலும், மெல்லிசை தனிப்பாடல் போட்டியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, காளப்பட்டி பள்ளியில் பயிலும் ஐந்தாம் வகுப்பு மாணவி அ.ஆன்ரினால் பிரின்சி மாநில அளவில் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளார்.

புகார்செய்

மறுமொழி இடவும்