கோவை மாநகராட்சி 74-வது வார்டு இந்திய தேசிய காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் ஏஎஸ். சங்கர், இந்திரா நகர் பகுதியில் மக்களின் குறைகளை இன்று (ஜனவரி 24) கேட்டு அறிந்தார்.
பின்னர் உடனடியாக குடிநீர், தூய்மைப்பணி உள்ளிட்ட குறைகளை களைய கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். உடன் பூவை திருமகன், வி. கண்ணன், தளபதி மணி, எஸ். ஆனந்த் ஆகியோர் இருந்தனர்.
மேலும், மாமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் கண்ணாடி குடோன் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி இன்று (ஜனவரி 24) துவங்கப்பட்டது.
உடன் வார்டு திமுக செயலாளர் ஆர். வீரமணி, வார்டு காங்கிரஸ் தலைவர் ஆர். முனியப்பன், இந்திரா நகர் ஜெய் கணேஷ், உதயகுமார், பூவை திருமகன், வி. கண்ணன், எஸ். ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.