councillor inspects

கோவை மாநகராட்சி வார்டு எண் 27-ல் கவுன்சிலர் ஆய்வு

கோவை வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு லால்பகதூர் காலனி பகுதியில், EB மூலம் வெட்டிய செடிகள் மற்றும் மரங்களை அரவை இயந்திரம் மூலம் தூளாக்கும் பணி இன்று (ஜனவரி 24) நடைபெற்றது.

வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் சென்று இந்த பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அனைத்து செடிகள் மற்றும் மரங்கள் முழுமையாக தூளாக்கப்பட வேண்டும் என்று தூய்மை பணியாளர்களிடம் தெரிவித்தார்.

அதன்பிறகு, வார்டு எண் 27, பீளமேடு ஆவாரம்பாளையம் பிரதான சாலை ஸ்ரீ கோபால் நாயுடு சில்ட்ரன்ஸ் ஸ்கூல் அருகில் சாலை ஓரத்தில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியைவும் கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவரது ஆலோசனையின் படி, சாலையோர குப்பைகள் முழுவதும் சுத்தமாக அகற்ற வேண்டும் என்று தூய்மை பணியாளர்களிடம் கூறினார்.

மேலும், கோவை வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு கோயமுத்தூர் மாநகராட்சி துவக்க பள்ளியில் புதிய சமையலறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று (ஜனவரி 24) இந்த பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்பிறகு, பள்ளி குழந்தைகளுக்கு இடையூறு இல்லாமல் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார். இந்த நேரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.

புகார்செய்

மறுமொழி இடவும்