dengue eradication

கோவை மாநகராட்சி 27-வது வார்டில் டெங்கு கொசு ஒழிப்பு பணி நடைபெற்றது

கோவை மாநகராட்சி 27வது வார்டு பீளமேடு துக்கினார் வீதி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி இன்று (ஜனவரி.22) நடைபெற்றது.

அதன்படி, கொசு புழுக்கள் கண்டறியப்பட்டு, அகற்ற பட்டு, ப்ளீச்சிங் பவுடர் போடப்பட்டது. தொடர்ந்து தண்ணீர் தொட்டிக்கு அபெட் மருந்து ஊற்றப்பட்டது.

இந்த பணிகளை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று (ஜன.22) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பணிகளை விரைவில் முடிக்குமாறு பணியாளர்களிடம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

புகார்செய்

மறுமொழி இடவும்