கோவை மாவட்ட தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தேசிய அளவிலான பைக் ரேஸ் நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பந்தய வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது சாகச திறமைகளை வெளிப்படுத்தினர்.
கோவை கொடிசியா தொழிற் கூட கண்காட்சி வளாகம் அருகிலுள்ள திறந்தவெளி மைதானத்தில் ஜனவரி 26 அன்று இந்த பைக் ரேஸ் நடைபெற்றது. கோவை மாநகர மாவட்ட தி.மு.க செயலாளர் நா. கார்த்திக் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட இந்திய மாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இந்த பைக் ரேஸை காண கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இருசக்கர வாகன ரசிகர்கள் ஆர்வத்துடன் கூடி கண்டு மகிழ்ந்தனர். குறிப்பாக ஆஃப்ரோடு என அழைக்கப்படும் சிரமமான சாலைகளில் பைக் ரேஸர்கள் சீறிப்பாய்ந்த காட்சிகள் பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. பல சுற்றுக்களாக நடைபெற்ற இந்த போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதியில் வெற்றி பெறுபவர் அறிவிக்கப்படவுள்ளார்.
One of the standout moments of the event was the daring performances on rugged, off-road tracks, which left the audience amazed. The race, conducted over multiple rounds, will crown the winner based on the points scored in each round.