Dulquer Salmaan Telugu movie success

துல்கர் சல்மானின் அசுர வதம் ! தெலுங்கு சினிமாவில் ஹாட்ரிக் வெற்றி

மலையாளத் திரையுலகத்தின் மெகா ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், தன் அப்பாவைப் போலவே மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு ,ஹிந்தி என ஆகிய மொழிகளிலும் நடித்து வசூல் சக்கரவர்த்தியாக அசத்தி வருகிறார்.

2012ல் வெளிவந்த ‘செகண்ட் ஷோ’ என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தன் நடிப்பின் மூலம் பல பெண்களின் இதயத்தில் ரசிகனாக ஜொலித்தார். அதே போல் 2014ல் வெளிவந்த ‘வாயை மூடிப் பேசவும் என்ற படத்தின் முலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 2018ல் தெலுங்கில் வெளிவந்த ‘மகாநடி’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் காலடி வைத்து தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை வென்று எடுத்தார்.

இப்படத்தில் மறைந்த நடிகை சாவித்ரியின் பயோபிக் படமாக வந்த அப்படத்தில் சாவித்ரியின் காதலர், கணவர், நடிகர் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் துல்கர் சல்மான். அப்படத்தில் அவருடைய நடிப்பு ரசிகர்களை கொள்ளை கொண்டது மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது.

அதற்கடுத்து 2022ல் வெளிந்த ‘சீதாராமம்’ தெலுங்குப் படத்தில் நடித்தார் துல்கர். அந்தப் படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் அந்த ஆண்டில் தலைச்சிறந்த படங்களில் இப்படமும் முதன்மை பெற்றது.அதேபோல் காதலர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு மட்டுமில்லாது தெலுங்கு சினிமாவில் பெண்களின் காதல் நாயகனாக உருவாக்கி கொடுத்தது.

இப்போது கடந்த வாரம் தீபாவளிக்கு களமிறங்கிய ‘லக்கி பாஸ்கர்’ தெலுங்குப் படம் அவரது மூன்றாவது தெலுங்குப் படமாக அமைந்துள்ளது. அந்தப் படத்திற்கும் நல்ல விமர்சனம் கிடைத்தது மட்டுமல்லாமல் நான்கு நாட்களில் 50 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கில் துல்கர் நடித்த மூன்று படங்களுமே வியாபார ரீதியாக விமர்சனம் ரீதியாக வெற்றி பெற்று அவருக்கு ஹாட்ரிக் கோப்பையை வென்று கொடுத்தது.

புகார்செய்

மறுமொழி இடவும்