கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண்-52, ஹட்கோ காலனி பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்படுவதாக வந்த புகாரை அடுத்து, கிழக்கு மண்டல தலைவர் திருமதி.இளஞ்செல்வி கார்த்திக் அவர்கள் இன்று (ஜனவரி.29) உடனடியாக அப்பகுதிக்கு நேரில் சென்று உதவி நிர்வாகப் பொறியாளர் திரு.ராஜேஷ் கண்ணா அவர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
நீண்ட நாட்களாக இப்பிரச்சனை தொடர்வதால் நிரந்தர தீர்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். உடனடியாக பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
உடன் சுகாதார மேற்பார்வையாளர் திரு.சாந்தமூர்த்தி, ஹட்கோ காலனி திரு.மாணிக்கம், தலைவர் திரு.துரை, செயலாளர் திரு. மாரியப்பன், திரு.தொல்காப்பியன் உள்ளிட்டோர் இருந்தனர்.