Elderly Man Dies

கோவை தடாகம் அருகே உள்ள தாளியூர் பகுதியில் யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

கடந்த சில நாட்களாகவே கோவை தடாகம் வனப்பகுதியில் காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனத்திலிருந்து வெளியேறி அருகிலுள்ள கிராமங்களில் உலாவி வருகின்றன. இதை கண்காணிக்க வனத்துறை "ஆல்ஃபா" என்ற குழுவை அமைத்து ரோந்து பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

இன்று ஜனவரி 23 காலை 5 மணியளவில், ஒரு காட்டு யானை வனப்பகுதியிலிருந்து வெளியேறியது. அதே நேரத்தில், தாளியூரை சேர்ந்த மளிகை கடை உரிமையாளரான நடராஜன் அவர்கள் வழக்கம்போல் காலை 5.30 மணியளவில் தாளியூர் சாலையில் நடைபயிற்சிக்கு சென்றார்.

அப்போது வனத்திலிருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை நடராஜனை தாக்கியது. இந்த தாக்குதலால் நடராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து, வனத்துறை மற்றும் தடாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நடராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயன்றனர்.

ஆனால், நடராஜனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் தாளியூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், வனத்துறை மற்றும் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறியல் போராட்டத்தை கைவிட செய்தனர். இந்த துயரச் சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகார்செய்

மறுமொழி இடவும்