சென்னையில் வசித்து வருபவர் சத்யபாமா (வயது 77). தனது மகள் வீட்டிற்கு பாலக்காட்டிற்கு செல்ல சென்னையிலிருந்து ரயில் மூலம் பயணம் செய்தார்.
அந்த ரயில் கோவை ரயில் நிலையம் அருகே வந்தபோது, அவரது மோதிரம், செல்போன் இருந்த கைப்பை மாயமானது. உடனடியாக, ரயில்வே போலீசில் அவர் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், ரயில்வே போலீசார் கோவை மத்திய ரயில் நிலையத்தில் முழுமையான சோதனை நடத்தினர். அதில் சந்தேகத்துக்கிடமான நபரை பிடித்து விசாரணை செய்தபோது, மூதாட்டியின் கைப்பையைத் திருடியது தெரியவந்தது.