farmers submit

காட்டுப்பன்றிகளை சுடுவதற்கான அறிவிப்பை செயல்படுத்த கோவை விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட காட்டுப் பன்றிகளை சுடுவதற்கான அறிவிப்பை உடனடியாக நிறைவேற்ற கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று (ஜன.20) மனு அளித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பழனிச்சாமி தலைமையில், விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்.

அந்த மனுவில், தமிழக சட்டப்பேரவையில் காட்டுப் பன்றிகளால் ஏற்படும் இழப்புகளைத் தடுக்கவும் விவசாயிகளின் விலை பயிர்களை பாதுகாக்கவும் காட்டுப் பன்றிகளை சுடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த அறிவிப்பை கோவையில் உடனடியாக செயல்படுத்த வேண்டும், கோவை மாவட்டத்தில் இருந்து அதன் செயல்பாடு தொடங்க வேண்டும் எனவும், அனுமதி பெறுபவர்களுக்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற வழிகாட்டுதல்களுடன் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

புகார்செய்

மறுமொழி இடவும்