பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்து இருந்த நிலையில், பண்டிகை நாட்கள் முடிந்ததால் தற்போது பூக்களின் விலை குறைந்துள்ளது.
கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
மகர விளக்கு மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பூக்களின் தேவை அதிகரிப்பதால் விலையும் உயர்ந்து காணப்படும். அதன்படி, தீபாவளியில் கிலோ ரூ.3,200 வரை விற்பனையான மல்லிகைப்பூவின் விலை தற்போது (ஜன.20) ரூ.1,200 ஆக குறைந்துள்ளது. மேலும், முல்லைப்பூ ரூ.1,800க்கு விற்ற பூவின் விலை கிலோ ரூ.800 ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.