கோவை, சிங்கநால்லுாரில் வசித்து வருபவர் பொங்கலுார் பழனிச்சாமி. தி.மு.க., முன்னாள் அமைச்சரான இவர், 2006-2011ல் பதவியில் இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக, ₹44 லட்சம் ரூபாய்க்கு சொத்து குவித்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, கோவை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இருதரப்பு வாதம் முடிந்து, இறுதி விசாரணை நடக்க இருந்த நிலையில், இவ்வழக்கை, கோவை முதன்மை சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றி, ஐகோர்ட் உத்தரவிட்டது
இதையடுத்து, வழக்கு ஆவணங்கள் குறிப்பிடப்பட்ட அந்த கோர்ட்டிற்கு மாற்றப்பட்டு, நேற்று ஜன.20 விசாரணைக்கு வந்தது. அப்போது, பழனிச்சாமி தரப்பில் அவரது வக்கீல் அருள்மொழி ஆஜரானார்.
வழக்கை பிப்., 3ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி கலைவாணி, அப்போதைய விசாரணை அதிகாரியான சண்முகபிரியா, கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.