கோவை அருகே உள்ள கீரணத்தம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் அரசாணையை திரும்ப பெறாவிட்டால் வருகிற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என்று கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
தமிழ்நாடு அரசு மாநகராட்சியின் எல்லையை விரிவாக்கும் நோக்கில் கிராம பஞ்சாயத்துகளை மாநகராட்சியுடன் இணைக்க கடந்த சில மாதங்களாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மக்களிடத்தில் கருத்து கேட்பு கூட்டங்களும் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 1 நகராட்சி, 4 பேரூராட்சிகள், 9 ஊராட்சிகள் என மொத்தம் 14 உள்ளாட்சி அமைப்புகளை கோவை மாநகராட்சியுடன் இணைக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதில், சரவணம்பட்டி அருகிலுள்ள எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தின் கீழ் உள்ள கீரணத்தம் ஊராட்சி நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
Despite the opposition, the Tamil Nadu government proceeded with issuing the merger order. In response, the residents of Keeranatham submitted a petition to the district collector seeking the order’s withdrawal.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில், பொதுமக்கள், அரசியல் அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தீர்மானம் நிறைவேற்றினர்.
ஆனால், கிராம சபை தீர்மானத்தை புறக்கணித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கீரணத்தம் ஊராட்சி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
• The loss of employment opportunities under the 100-day work scheme.
• Sharp increases in property tax, water charges, and garbage disposal fees.
• The imposition of new taxes on vacant lands and higher development fees for construction.
குடியரசு தினத்தையொட்டி (ஜனவரி 26), கீரணத்தம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் சாம்பிராணி குட்டை மாரியம்மன் கோவில் மைதானத்தில் சிறப்பு அலுவலர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செயல் அலுவலர் பாலாஜி முன்னிலை வகித்தார். கிராம சபையில் பொதுமக்கள், அரசியலமைப்பினர், சமூக ஆர்வலர்கள் கருப்பு பட்டை அணிந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பொதுமக்கள் இந்த முயற்சிக்கு எதிராக தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்தி, "100 நாள் வேலை திட்டம் இல்லாமல் போகும், வீட்டு வரி மற்றும் குடிநீர் கட்டணம் உயரும், குப்பைக்கு கூட தனி வரி வசூலிக்கப்படும்" என அச்சங்களை கூறினர்.
மேலும், தமிழக அரசு தனது திட்டத்தை திரும்ப பெறாவிட்டால், வருகிற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.