தீபாவளி அன்று வெளியான ‘லக்கி பாஸ்கர்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் அடுத்தடுத்து சாதனை படைத்துள்ளது
தமிழ், மலையாளம் , ஹிந்தி , தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக பிரபலமாகி வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாள நடிகராக இருந்தாலும், இவரது திரைப்படங்கள் தென்னிந்திய மொழிகளில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது . துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தான் ‘லக்கி பாஸ்கர்’.
வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் லக்கி பாஸ்கர். இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வெளியிட்டது. இதில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடித்தார். ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைத்தார்.
அக்டோபர் 31-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சாதாரண நபரான நாயகன் அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தை ஏமாற்றி பெரும் செல்வந்தனாக மாறும் கதையாக உருவான இப்படம், தெலுங்கு மற்றும் மலையாளத்தை முதன்மையாகக் குறிவைத்து உருவானாலும் தமிழில் கவனிக்கப்பட்டு வருகிறது மட்டுமல்லாமல் தியேட்டர்களில் கூட்டங்கள் அலைமோதிகின்றன.
இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூல் செய்து எல்லாம் மொழிகளிலும் வசூல் சக்கரவர்த்தி நாயகனாக திகழ்கிறார் துல்கர் சல்மான் .
இது குறித்து படக்குழுவினர் உற்சாகத்துடன் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக துல்கர் சல்மான் நடிப்பில் ஒரே ஒரு படம் மட்டுமே வெளியான நிலையில் தற்போது ‘லக்கி பாஸ்கர்’ அவருக்கு மீண்டும் பழைய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.