Swearing in Ceremony

செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுசாமி திருக்கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுசாமி திருக்கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக M. பழனிசாமி, A. ஈஸ்வரன், M. விவேகானந்தன், நிர்மலா தேவி முருகேஷ் மற்றும் A. ராஜேந்திரன் ஆகியோர் இன்று (ஜனவரி 28) பதவியேற்றனர். இந்த பதவி பிரமாண நிகழ்ச்சி, கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் முன்னிலையில், கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் P.இந்திரா அவர்களால் இக்கோயிலில் வைத்து நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அறங்காவலர் குழு தலைவராக M. பழனிசாமி அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிகழ்வில், கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிபி. K. செந்தில்குமார், சூலூர் சரக ஆய்வாளர் த. வடிவுக்கரசி, சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் M.K. முத்துமாணிக்கம், சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் P.V. மகாலிங்கம், கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் P.R. இராஜன், மேற்கு ஒன்றிய அவை தலைவர் இராஜேந்திரன், சுல்தான்பேட்டை ஒன்றிய நிர்வாகிகள், ஏராளமான கழக தோழர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புகார்செய்

மறுமொழி இடவும்