14 ஆண்டுகளுக்குப் பிறகு, புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற உள்ள மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக ரூ. 12 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய தர்ப்பண மண்டபம் தயாராகி உள்ளது.
2010ஆம் ஆண்டு கடைசியாக கும்பாபிஷேகம் நடைபெற்ற இக்கோயிலில், கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புதிய தர்ப்பண மண்டபத்தில் 50 மண்டபங்கள், கழிப்பறை, காத்திருக்கும் இடம், பசுமடம், வாகன நிறுத்தும் இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும், நவக்கிரகங்களை குறிக்கும் வகையில் 9 நவக்கிரக தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேக நாளில் இந்த தர்ப்பண மண்டபம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும் என கோயில் நிர்வாகம் இன்று ஜன.20 தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.