Science Centre

கோவை மண்டல அறிவியல் மையத்தில் ஆறு கோள்களின் சீரமைப்பு நிகழ்வை காண ஏற்பாடு

கோவை: ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும், சீரமைப்பு நிகழ்வை காண மண்டல அறிவியல் மையம் இரவு வான் நோக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

பூமியிலிருந்து நாம் பார்க்கும் போது, ஒரே நேரத்தில் வானில் தெரியும் கோள்கள் ஒரே கோட்டில் தோன்றுவது போன்ற சீரமைப்பு, கோள்களின் அணிவகுப்பு எனப்படுகிறது.

வரும், 25ம் தேதி செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன், வெள்ளி மற்றும் சனி ஆகிய ஆறு கோள்களின் அணிவகுப்பு/சீரமைப்பு சூரியன் மறைவுக்கு பின் நடக்க உள்ளது. இவற்றில், செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கோள்கள் வெறும் கண்ணுக்கு எளிதாகத் தெரியும். தொலைநோக்கி அல்லது அதிக சக்தி வாய்ந்த பைனாக்குலர் வாயிலாகவே, மற்ற இரு கோள்களையும் பார்க்க முடியும்.

இந்த அரிய வான் நிகழ்வை வரும், இன்றுமுதல், இம்மாத இறுதி வாரம் வரை பார்க்கலாம்.

இந்த அறிய வான் நிகழ்வை காண, கோவை கொடிசியா ரோட்டில் உள்ள மண்டல அறிவியல் மையம், பொதுமக்களுக்காக இரவு வான் நோக்கும் நிகழ்வை நடத்துகிறது.

வரும், 22 முதல், 25ம் தேதி வரை மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை நிகழ்வு ஏற்பாடு செய்துள்ளது.

பொதுமக்கள், மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். மேலும் தகவல்களுக்கு, 0422-2963025, 2963026 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கோவை மண்டல அறிவியல் மையம் சார்பில் இன்று ஜன.21 அறிவிக்கப்பட்டுள்ளது.

புகார்செய்

மறுமொழி இடவும்