ஆர்ஜே பாலாஜி, விகடன் குழுமம் ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில், தனது குழந்தைப் பருவத்திலிருந்து தற்போதுவரை உள்ள திரையுலகப் பயணத்தைப் பற்றி பேசினார். மேலும், தனது குடும்பம் மற்றும் வாழ்க்கையில் மறக்க முடியாத நிமிடங்களைப் பற்றிய தனிப்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
மணிரத்னம், மகேஷ் பாபு, விக்னேஷ் சிவன், நயன்தாரா போன்ற பிரமுகர்களுடன் பணிபுரிந்த அனுபவங்கள் மற்றும் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், சுந்தர் சி , நடிகர் சத்யராஜ் ஆகியோருடன் தனக்கு இருந்த நெருங்கிய நட்பைப் பற்றியும் தனது அடுத்த படத்தின் அப்டேட் பற்றி விவாதித்தார்.
அவர் தனது வரவிருக்கும் திரைப்படமான சொர்கவாசல் படத்தின் திரைக்கதை சொல்லிய விதத்தை பற்றியும் அதில் சூர்யாவுக்கு ஏற்பட்ட கதையின் தாக்கம் என அடுத்தடுத்து திட்டத்தைப் பற்றிய பேசியுள்ளார்.