கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ ஜனவரி 26 அன்று தனது முகநூல் பக்கத்தில், இந்த ஆண்டின் பத்ம விருது பெற்றவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மத்திய அரசு வழங்கும் உயரிய விருதுகளான 'பத்ம விபூஷன்,' 'பத்ம பூஷன்,' மற்றும் 'பத்ம ஸ்ரீ' விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 'பத்ம விபூஷன்' விருது ஏழு பேருக்கும், 'பத்ம பூஷன்' விருது 19 பேருக்கும், 'பத்ம ஸ்ரீ' விருது 113 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. தங்களது துறைகளில் சாதனைகளைப் படைத்து நாட்டிற்கு பெருமை சேர்த்த அனைவருக்கும் பாராட்டுக்கள் தெரிவித்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி, நடிகர் அஜித்குமார், பரத நாட்டியக் கலைஞர் ஷோபனா ஆகியோர் 'பத்ம பூஷன்' விருது பெற்றுள்ளனர்.
'பத்ம ஸ்ரீ' விருது பெற்றவர்களில் 'தினமலர்' இணை நிர்வாக ஆசிரியர் லட்சுமிபதி ராமசுப்பு, கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், கலைஞர்கள் வேலு ஆசான் மற்றும் குருவாயூர் துரை, சமையல்கலை நிபுணர் கே.தாமோதரன், கட்டிடக் கலை விஞ்ஞானி எம்.டி.ஸ்ரீனிவாஸ், கலைஞர் புரசை கண்ணப்ப சம்பந்தன், ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி, இலக்கிய மற்றும் கல்வி நிபுணர் ஸ்ரீனி விஸ்வநாதன் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பி. தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்த வானதி சீனிவாசன், நாட்டின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் பங்களிப்புச் செய்யும் பல்துறை சாதனையாளர்களை அடையாளம் கண்டு பத்ம விருதுகளை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.