Foundation Ceremony

இராமகிருஷ்ணபுரம் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் தண்ணீர் தொட்டி கட்ட பூமி பூஜை

கோவை மாநகராட்சி 63-வது வார்டுக்கு உட்பட்ட இராமகிருஷ்ணபுரம் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் தண்ணீர் தொட்டி கட்ட பூமி பூஜை இன்று (ஜனவரி.23) நடைபெற்றது.

இந்த பூமி பூஜையை கோவை பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன் செய்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் குழந்தைகள், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புகார்செய்

மறுமொழி இடவும்