Wild Elephant

ஆனைமலை அடுத்த நவமலை அருகே பொலிரோ காரை கவிழ்த்த காட்டு யானை

ஆனைமலை அடுத்த நவமலை அருகே ஒரு ஒற்றை காட்டு யானை விரட்டி வந்து தாக்கியதால், பொலிரோ கார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

கடந்த சில நாட்களாக, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் ஒரு ஒற்றை யானை சுற்றி திரிகிறது. இது பொதுமக்கள் பயணிக்கும் ஆழியார்-வால்பாறை சாலையில் அவ்வப்போது தோன்றுவதால், சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், (ஜனவரி 23) மதியம் ஆனைமலை அடுத்த நவமலை பகுதியில் மின்வாரிய இளநிலை பொறியாளர் விஸ்வநாதன், அலுவலக பணிகளை முடித்துவிட்டு தனது சக பணியாளர்கள் சந்தோஷ் மற்றும் செல்வராஜ் ஆகியோருடன் அப்பர் ஆழியார் செல்வதற்காக காரில் பயணம் செய்தார். அப்போது, எதிர் திசையில் இருந்து வந்த காட்டு யானை அதிவேகமாக வந்து, அவர்கள் பயணித்த காரை தாக்கி பள்ளத்தில் தள்ளியது.

இதன் விளைவாக, கார் 10 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த மூவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

புகார்செய்

மறுமொழி இடவும்