Woman Dies

கோவை மாநகராட்சி அலுவலக மாடிப்படியில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு - போலீஸார் விசாரணை

கோவை, வடமதுரை அருகேவுள்ள அப்பநாயக்கன்பாளையம், ஈஸ்வர சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (68), மாநகராட்சியில் காவலாளியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்கு மாதாந்திர ஓய்வூதியம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.

இந்த மாதத்துக்கான ஓய்வூதியத் தொகையைப் பெறுவதற்காக அவரது மகள் பானுப்பிரியா (36) மாநகராட்சி அலுவலகத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார்.

அங்கு மாடியில் உள்ள ஓய்வூதியப் பிரிவுக்கு படிகளில் ஏறியபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். இதில், பின் மண்டையில் பலத்த காயம் அடைந்த அவர் மயக்கமடைந்தார்.

அங்கிருந்தவர்கள் பானுப்பிரியாவை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பின்னர், இது குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் பானுப்பிரியாவின் தாய், ராஜேஸ்வரி, நேற்று ஜன.22 புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புகார்செய்

மறுமொழி இடவும்