பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்களுக்கான பேட்மிண்டன் போட்டிகள், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரியில் நேற்று துவங்கியது.
வரும், 17ம் தேதி வரை ‘நாக் அவுட்’ முறையில் நடக்கும் இப்போட்டியில், 28 அணிகள் பங்கேற்றுள்ளன. கல்லூரி செயலாளர் கண்ணப்பன், முதல்வர் பிருந்தா ஆகியோர் போட்டிகளை துவக்கிவைத்தனர்.
முதல் போட்டியில், எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி அணி, 3-0 என்ற செட் கணக்கில், ஸ்ரீ ராமு கலை அறிவியல் கல்லூரி அணியை வென்றது.
தொடர்ந்து, கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி அணி, 3-0 என்ற செட் கணக்கில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி அணியையும், டாக்டர் என்.ஜி.பி., கல்லூரி அணி, 3-0 என்ற செட் கணக்கில் பாரத்சித்தலைவி அம்மா கலை அறிவியல் கல்லூரி அணியையும், கோபி அரசு கலைக் கல்லூரி அணி, 3-0 என்ற செட் கணக்கில், பாரதியார் பல்கலை அணியையும் வென்றன.
கோவை அரசு கலைக் கல்லூரி அணி, 3-2 என்ற செட் கணக்கில் கே.ஜி., கலை அறிவியல் கல்லூரி அணியையும், ஜி.ஆர்.டி., கல்லூரி அணி, 3-2 என்ற செட்கணக்கில் பி.எம்.எஸ்., கலை அறிவியல் கல்லூரி அணியையும், என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லூரி அணி, 3-0 என்ற செட் கணக்கில் இந்துஸ்தான் கல்லூரி அணியையும் வென்றன.
ஆர்.டி., நேஷனல் கலை அறிவியல் கல்லூரி அணி, 3-0 என்ற செட் கணக்கில் பார்க் கல்லூரி அணியையும், அவிநாசி அரசுக் கல்லூரி அணி, 3-2 என்ற செட் கணக்கில் பிஷப் அம்புரோஸ் கல்லூரி அணியையும், எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி அணி, 3-2 என்ற செட் கணக்கில் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரி அணியையும் வென்றன. போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.