கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாகவே மதியத்திற்கு மேல் துவங்கி இரவு வரை பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்கள் மழை நீரினால் சூழ்ந்தன.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றன.
இந்நிலையில் இன்று (அக்டோபர்.15) காலை லாலி ரோடு – வடவள்ளி செல்லும் சாலையில் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.
குறிப்பாக கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் செயல்படும் உழவர் நலத்துறை அலுவலகம் இருக்கும் வளாகம் முழுவதும் மழை நீரால் சூழ்ந்ததுள்ளது. மேலும் சாலைகளிலும் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன.